மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
9 hour(s) ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
9 hour(s) ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
9 hour(s) ago
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
9 hour(s) ago
புதுச்சேரி : ஏ.ஜே., சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பொற்காசுகள் பரிசாக வழங்கப்பட்டது.தவளக்குப்பம் அடுத்த டி.என்.பாளையத்தில் ஏ.ஜே., சி.பி.எஸ்.இ., மேல் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவர்கள், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளது.மாணவி வேதகாசினி 480 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்தார். மாணவி சலோஷினி 451 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம், மாணவர் முகிலர் 431 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர். அவர்களை பாராட்டி, பள்ளியின் தாளாளர் மேரி ஜான்சன், மரிய ஜீனா ஜான்சன் ஆகியோர் முன்னிலையில் பொற்காசுகள் வழங்கினர். பள்ளி முதல்வர் ரங்கநாதன், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளியில் தற்போது பிளஸ் 1 வகுப்பிற்கான சேர்க்கை நடக்கிறது. இதில், அதிக மதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு, 100 சதவீத கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. ஜூனியர் ஐ.ஏ.எஸ்.,
இந்த பள்ளியில் சிறப்பு மொழித்திறன் ஆய்வுக்கூடம், வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆய்வுக்கூடங்கள் உயர்ந்த தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்தாண்டில் இருந்து, மாணவர்களின் பொதுத்திறனுக்காக, 4 வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரை, ஜூனியர் ஐ.ஏ.எஸ்., வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago