புதுச்சேரி : புதுச்சேரி ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பரத் 600 மதிப்பெண்ணிற்கு 591 மதிப்பெண்ணுடன் சயின்ஸ் குரூப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.அவர் மொழிப்பாடத்தில் 100,ஆங்கிலம் 94,இயற்பியல் 100,வேதியியல்-99,உயிரியல் 98,கணிதம் 100 மதிப்பெண் எடுத்துள்ளார்,மாணவி வேதவள்ளி 589 மதிப்பெண்ணுடன் பள்ளியில் இரண்டாம் இடத்தையும், மாணவிகள் டீனா குமாரி, ஷாலினி ஆகியோர் 586 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளனர். 575 மதிப்பெண்ணிற்கு மேல்
மாணவர்கள் கனீஷ்கர் 584, ரூத்ரா 581, ராம்பிரசாத் 579, காவியா 578, ேஹமச்சந்திரன், கிரண், சுசிதா ஆகியோர் 575 மதிப்பெண்ணுடன் சிறப்பு நிலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 550 மதிப்பெண்ணிற்கு மேல்
மாணவர்கள் பாரதி 570, தரூன், சர்மிதா 569, ேஹமநாதன் 567, பரணிதரன், விஷ்வபிரியா 562, பர்வீன் 560, ராஜஸ்ரீ 559, சிவஸ்ரீ 558, யோகேஷ்வரி 557, கீர்த்தனா 555, ஸ்ரீராம் 554, ரம்யாஸ்ரீ 552, அன்பல் 550 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர்.பள்ளி இயக்குனர் தனத்தியாகு கூறுகையில், பிளஸ்2 பொதுத்தேர்வில் எங்கள் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்ணுடன் மாநில அளவில் சாதித்துள்ளனர். மாணவர்கள் பரத், வேதவள்ளி, டீனாகுமாரி, ஷாலினி ஆகியோர் மூன்று பாடங்களிலும், கனீஷ்கர் இரண்டு பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். பள்ளியில் பள்ளி படிப்புடன் நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. மாணவர்களின் படிப்பில் தனி கவனம் செலுத்தி வருவதால், எங்கள் பள்ளி தொடர்ந்து பொதுத் தேர்வுகளில் அதிக தேர்ச்சியுடன் சாதித்து வருகின்றது. பள்ளியில் கே.ஜி., முதல் பிளஸ்1 வரையிலான வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கின்றது. சேர்க்கைக்கு 96007-88566, 97900-14248 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.