உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன்னாள் மாணவர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

முன்னாள் மாணவர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

புதுச்சேரி : நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் (1978--79, 1979--80) ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 4ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சத்தியபாமா மஹாலில் நடந்தது.முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் தெய்வநாயகம் தலைமை தாங்கினார். புண்ணியமூர்த்தி முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகிகள் செல்வ கணபதி, ஞானசேகர், முரளிதரன், சர்வேஸ்வரன், முருகையன், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புருஷோத்தமன் வாழ்த்தி பேசினார்.கூட்டத்தில் தங்களுடன் படித்த நலிந்த முன்னாள் மாணவர்களுக்கு பொருளாதார மற்றும் மருத்துவ உதவிகள் வழங்குவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ