உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

புதுச்சேரி : வழுதாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.வழுதாவூர் அடுத்த பக்கிரிபாளையம் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி யில், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர், கலிய மூர்த்தி தலைமை தாங்கினார். தங்கராசு முன்னிலை வகித்தார். ேஹமசவுந்தரி வரவேற்றார்.முன்னதாக முன்னாள் மாணவர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னாள் மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களுடன் இருந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் முத்துகிருஷ்ணன், பெரிய சாமி, உமாபதி, ராஜமாணிக்கம், தெய்வசிகாமணி, காசிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் டில்லிராஜா, மதியழகன், செல்வம், ஜெயராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை