| ADDED : ஜூலை 24, 2024 06:12 AM
புதுச்சேரி : புதுச்சேரி ஜீவானந்தம் அரசு பள்ளியில் 1973-74ம் ஆண்டு படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தனர்.அகத்தியர் மகாலில் நடந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமின்றி, பாரீஸ், நைஜிரியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் முன்னாள் மாணவர்கள், பேரன், பேத்தி, என குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.பள்ளி வளாகத்தில் சுற்றி வந்த அவர்கள், மலரும் நினைவுகளில் மூழ்கினர்.சந்திப்பு நிகழ்ச்சிக்காக பிரான்சில் இருந்து புதுச்சேரிக்கு வந்திருந்த முத்துகுமார் கூறுகையில், 'கடந்த 1973ம் ஆண்டு இப்பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் 123 மாணவர்கள் படித்தோம். முதலில் இப்பள்ளி முதலியார்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியாக இருந்தது. அப்போது ஆண்கள்,பெண்கள் இருபாலரும் படிக்கும் பள்ளியாக இருந்தது. நாங்கள் படித்தபோது தான் ஜீவாந்தனம் பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு பிறகு பழைய நண்பர்களை சந்திப்பது புத்துணர்ச்சியாக உள்ளது' என்றார்.