உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி 31வது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி

அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி 31வது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி

புதுச்சேரி: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி 31வது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சியை அளித்து அசத்தியுள்ளது.அப்பள்ளியின் முதுநிலை முதல்வர் லுார்துசாமி கூறியதாவது:இந்தாண்டு எங்கள் பள்ளியில் 724 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இதில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை தேடி தந்துள்ளனர். 31வது ஆண்டாக எங்களது பள்ளி தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சியை கொடுத்துள்ளது.மாணவர் பரத்குமார் 500 மதிப்பெண்ணிற்கு 498 மதிப்பெண் எடுத்து தமிழ்நாடு அளவில் இரண்டாம் இடமும், புதுச்சேரி மாநில அளவில் முதலிடம் பெற்று, பெருமை தேடி தந்துள்ளார். அவருக்கு பள்ளி சார்பில் 8 கிராம் தங்க நாணயம், மேல்நிலைப் கல்வி பயில 100 சதவீத ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.அடுத்து பள்ளி மாணவி சஜன்யா 500க்கு 496 மதிப் பெண்கள் எடுத்து புதுச்சேரி மாநில அளவில் 3ம் இடம், பள்ளி அளவில் 2ம் இடம் பிடித்துள்ளார்.அவருக்கு 2கிராம் தங்க நாணயம், பள்ளியில் மேல்நிலைப் பயில 75 சதவீதம் ஸ்காலர்ஷிப் வழங்கப்படு கிறது.மாணவர்கள் யோகேஷ், ஹர்ஷினி வர்சிகா ஆகியோர் 495 மதிப்பெண்களுடன் 3ம் இடம் பெற்று தலா ஒரு கிராம் தங்க நாணயம், 50 சதவீத ஸ்காலர்ஷிப் அளிக்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு தேர்வில் 75 சதவீதத்திற்கு மேல் 503 பேரும், 60 சதவீதம் முதல் 74 சதவீத மதிப்பெண் வரை 177 மாணவர்கள் பெற்று உயர்கல்வி வாய்ப்பினை பிரகாசப்படுத்திக்கொண்டனர்.490 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் 17 மாணவர்கள், 480 முதல் 489 வரை - 34, 450 முதல் 479 வரை - 151 பேர், 400 மதிப்பெண் முதல் 449 வரை 210 பேர் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.இதேபோல் ஆங்கிலத்தில்-1, கணிதம்-27, அறிவியல்-9, சமூக அறிவி யல்-10 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vadi Velan
மே 11, 2024 19:55

பள்ளியின் முதுநிலை முதல்வர் அவர்களின் அயராத கண்காணிப்பும் ஆசிரியர்கள் அனைவரின் கடின உழைப்பும் மேலும் மாணவர்களின் முயற்சியுமே இதனை சாத்தியமாக்கிஉள்ளது


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ