உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு அம்மையார்,பரமதத்தர் திருக்கல்யாணம்

மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு அம்மையார்,பரமதத்தர் திருக்கல்யாணம்

காரைக்கால்: காரைக்காலில் மாங்கனித் திருவிழாவில் அம்மையார், பரமதத்தர் திருக்கல்யாணம் நேற்று வெகுவிமர்ச்சியாக நடந்தது.சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார் இவரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களின் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனி கோவில் உள்ளது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டு தோறும் மாங்கனி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 19ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து மாலை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. நேற்று சீர்வரிசையுடன் குதிரையில் வந்த பரமதத்தர் செட்டியாரை புனிதவதி தாயார் எதிர்கொண்டு அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது.பின்னர் காரைக்கால் அமையார் மணிமண்டபத்தில் மணமகன் பரமதத்தர் பட்டாடை, நவமணி மகுடம், ஆபரணங்கள் அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். புனிதவதியார் பச்சை பட்டு உடுத்தி பவழமாலை அணிந்து மணமகள் கோலத்தில் எழுந்தளினார். பின் யாகம் வளர்க்கப்பட்டு திருமணவிழாவிற்கான சடங்குகள் நடந்தது.காலை 11மணிக்கு கெட்டி மேளம் முழுங்க கோவில் குருக்கள் புனிதவதியாருக்கும் மாங்கல்யம் அணிவித்தார். பின் மகா தீபாராதனை நடந்தது.திருக்கல்யாண வைபவத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மாங்கல்யம்,மஞ்சல், குங்குமம், மாங்கனியுடன் கூடிய தாம்பூலபை வழக்கப்பட்டது. பின் மாலை ஸ்ரீபிக்ஷாடன மூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் திருமுருகன்,எம்.எல்.ஏ.,நாஜிம்,கலெக்டர் மணிகண்டன்,துணை ஆட்சியர் ஜான்சன்,மாவட்ட எஸ்.பி.,கள் சுப்ரமணியன்,பாலச்சந்தர்,கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், தனி அதிகாரி காளிதாசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி