உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு மருத்துவமனையில் வழங்கிய அமோக்ஸிலின் சிரப்; ஜூன் 30 வரை பயன்படுத்தலாம் சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம் 

அரசு மருத்துவமனையில் வழங்கிய அமோக்ஸிலின் சிரப்; ஜூன் 30 வரை பயன்படுத்தலாம் சுகாதாரத்துறை இயக்குநர் விளக்கம் 

புதுச்சேரி : ராஜிவ்காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் வழங்கப்பட்ட அமொக்ஸிலின் மருந்து ஜூன் 30 வரை பயன்படுத்த உகந்தது என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. புதுச்சேரி தம்பதி தங்களின் 1 மாத குழந்தைக்கு, சளி பிரச்னைக்காக ராஜிவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு, டாக்டர்கள் பரிசோதித்து அமொக்ஸிலின் டிரை சிரப் வழங்கினர். 2024 ஜூன் மாதத்துடன் காலாவதி ஆகும் அந்த மருந்தை வீட்டிற்கு கொண்டு சென்று தண்ணீர் கலந்ததும், வெளீர் மஞ்சள் நிறமாக மாறியது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் மா.கம்யூ., கட்சி, சி.ஐ.டி.யு., தொழிற்சங்க நிர்வாகிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டு வாக்குவாத்தில் ஈடுப்பட்டனர். மருந்து வழங்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்து, சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு; ராஜிவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நோயாளிக்கு அமொக்ஸிலின் என்ற உலர் சிரப் மருந்து வழங்கப்பட்டது. அந்த மருந்தின் காலாவதி வரும் ஜூன் 30ம் தேதி பிறகு தான் உள்ளது. ஆகையால் குறிப்பிட்ட காலாவதி தேதிக்கு முன்னர் மருந்தின் செயல்திறன் மற்றும் நுகர்வுக்கான பாதுகாப்பு முற்றிலும் உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும். ஜூன் 2024 என்று லேபிளிடப்பட்டும்போது, மருந்து ஜூன் 30 .2024 வரை பயனுள்ளதாக இருக்கும் என்பதை குறிக்கிறது. நோயாளி பராமரிப்பு மற்றும் மருந்து பாதுகாப்பு ஆகியவற்றில் சுகாதாரத்துறை மிக உயர்ந்த தரத்தை நிலை நிறுத்துகிறது என்பதில் நம்பிக்கையுடன் இருக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. அனைத்து மருந்துகளும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்கள் மூலம் தரம் மற்றும் ஆற்றலுக்கான சரியான சோதனைக்கு பிறகு தான் சுகாதாரத்துறையால் வாங்கப்படுகிறது.அனைத்து மருந்து கையிருப்புகளும் காலாவதி தேதிகள் தகுந்த நேரத்தில் சரிபார்க்கப்படுவதையும், எதிர்கால மருந்தின் தேவைகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதையும் உறுதிசெய்ய தேவையான நடவடிக்கை சுகாதாரத்துறை தொடர்ந்து எடுத்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை