உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் வடிவமைத்த அதி நவீன பயிற்சி படகு

புதுச்சேரியில் வடிவமைத்த அதி நவீன பயிற்சி படகு

புதுச்சேரி : புதுச்சேரியில் அதி நவீன வசதிகளுடன் கூடிய பாய்மர பயிற்சி படகு கட்டுமான பணி முடிவடையும் நிலையில், துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் இருந்து நவீன வசதிகளுடன் கூடிய படகுகள் செய்யப்பட்டு கப்பல் படை மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புதுச்சேரியை சேர்ந்த அல்ட்ரா மரைன் என்னும் படகு கட்டும் நிறுவனம் மூலம், இந்திய கடற்படைக்கு 18 கோடி மதிப்பில் அதிநவீன பயிற்சி படகு கட்டப்பட்டு வருகிறது.இந்த படகிற்கு திருவேணி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படகு கடற்படையில் பயிற்சி பெறும் வீரர்களுக்காக கட்டப்படுவதாகவும், 80 சதவீதம் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து அந்த படகு தேங்காய்த்திட்டு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, நிறுத்தி வைத்துள்ளனர். படகில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த படகு பாய் மரம் மூலம் இயங்கும் வசதியும் கொண்டது. படகில் மற்ற பணிகளை முடிந்த பின்னர் புதுச்சேரியில் இருந்து மும்பைக்கு செல்ல உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை