| ADDED : மார் 23, 2024 11:28 PM
புதுச்சேரி: நமச்சிவாயம் தனது உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என, அ.தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது;மத்தியில் 10 ஆண்டுகள் தி.மு.க., காங்., கூட்டணி ஆட்சியில் புதுச்சேரிக்குமாநில அந்தஸ்து வழங்கவில்லை. கடந்த 10 ஆண்டு பா.ஜ., ஆட்சியிலும் மாநில அந்தஸ்து வழங்கவில்லை.காங்., வேட்பாளர் வைத்திலிங்கம், மாஜி முதல்வர் நாராயணசாமி மீண்டும் மாநில அந்தஸ்து பெற்று தருவோம் என கூறும் வாக்குறுதியை புதுச்சேரி மக்கள் நம்ப மாட்டார்கள்.சட்டசபை இல்லாமல் புதிதாக உருவான காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசம், மத்திய நிதிக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகள் மேலாக சட்டசபையுடன் செயல்படும் புதுச்சேரி மத்திய நிதி குழுவில் சேர்க்கவில்லை.லோக்சபா தேர்தலில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட உள்ளார். தேர்தலில் சமநிலையை உருவாக்கும் விதத்தில் நமச்சிவாயம் தனது உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும்.உள்துறை அமைச்சர் என்ற நிலையில் போலீஸ் துறை அவர் வசம் உள்ளது. தேர்தலின்போது, அவர் சார்ந்த துறைகள், அரசு இயந்திரங்கள் முழுமையாக நமச்சிவாயத்திற்கு ஆதராவாக செயல்படக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.இதனை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும். மறைந்த கண்ணன், உள்துறை அமைச்சராக இருந்தபோது தான் வகித்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நின்றார் என்பதை பா.ஜ., உணர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது மாநில இணைச் செயலாளர்கள் கணேசன், திருநாவுக்கரசு உடனிருந்தனர்.