வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பங்கு வரலையா?
புதுச்சேரி: பாண்டி மெரினா நிர்வாகத்தின் செயல்பாடுகளை கண்டித்து வம்பாக்கீரப்பாளையம் மீனவ மக்கள் நடத்திய மறியல் போராட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது; சுற்றுலா மேம்படுத்த அரசு ரூ.5 கோடி செலவில் 32 கடைகள் கட்டி பாண்டி மெரினா என பெயரிட்டு, பல கோடி செலவில் மின் வசதி, சாலை வசதி செய்தது. பாண்டி மெரினாவை அரசே நடத்தியிருக்க வேண்டும். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு காங்., கட்சியைச் சேர்ந்தவர் பா.ஜ.,வினர் என அறிவித்து கொண்டதால் அவர்களின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு பா.ஜ., அரசு துணை நிற்கிறது. வாடகைக்க விடப்பட்ட பகுதியில் 32 கடைகளுக்கு பதில் கூடுதலாக 50 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு கேளிக்கை வரி செலுத்துவதில்லை. மதுபான பார் திறக்கப்பட்டுள்ளது. படகு போக்குவரத்திற்கு அனுமதி பெற்று,சதுப்பு நில மாங்குரோஸ் காடுகளை அழித்து படகு போக்குவரத்து நடத்த பணிகள் செய்து வருகின்றனர். இதனால் பாண்டி மெரினாவில் ஏற்கனவே படகு சவாரி நடத்தும் மீனவ மக்கள் பாதிக்கப்படுவர்.பாண்டி மெரினா கடற்கரையை பயன்படுத்தி கொள்ள வழங்கியுள்ள ஒப்பந்தத்தை 5 ஆண்டுகளாக குறைத்து, 10 ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருதி, அரசு விசாரணை கமிஷன் அமைத்து மெரினா கடற்கரையை தனியாரிடம் இருந்து அரசு கைப்பற்ற வேண்டும்.
பங்கு வரலையா?