உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கால்நடை சிறப்பு முகாம்

கால்நடை சிறப்பு முகாம்

புதுச்சேரி, : புதுச்சேரி அரசு வேளாண்துறை மற்றும் கால்நடைத்துறை இணைந்து நடத்திய கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை முகாம், ஏம்பலம் அய்யனார் கோவில் வளாகத்தில் நடந்தது. முகாமை கால்நடைத்துறை இணை இயக்குனர் குமாரவேல் துவக்கி வைத்தார். அனைத்து கால்நடைகளுக்கும் சினை ஊசி மற்றும் குடற்புழு நீக்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளித்தார். முன்னதாக, வேளாண் அலுவலர் தினகரன் வரவேற்றார்.கால்நடை டாக்டர் செல்வமுத்து மற்றும் தாமரை செல்வி, அனைத்து கால்நடைகளுக்கும் குடற்புழு நீக்கம் செய்து செயல் விளக்கம் அளித்தனர். இதில், 150க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்குதல், மலட்டுத்தன்மை கண்டறிதல், ஊசி போடுதல், கர்ப்பபை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.நிறைவாக, கால்நடை விவசாயிகளுக்கு சத்துமாவு, கலவை மாடு சினை பிடிப்பதற்கான மருந்துகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை