உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இடஒதுக்கீடு முதல்வருக்கு அனிபால் கென்னடி நன்றி

இடஒதுக்கீடு முதல்வருக்கு அனிபால் கென்னடி நன்றி

புதுச்சேரி : இடஒதுக்கீடு தொடர்பான முதல்வரின் அறிவிப்புக்கு அனிபால் கொன்னடி நன்றி தெரிவித்தார்.சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் போது, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பேசியதாவது;முதல்வர் தனது அலுவலக குறிப்பு மூலம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், வன்னியர், குயவர், நாவிதர், வண்ணார் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மீனவர்கள், முஸ்லீம்கள், பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு நீண்ட நாள் மறுக்கப்பட்டு வந்த சமூக நீதி கோரிக்கையை முதல்வர் கவனத்திற்காக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். அதற்கு முன்னதாகவே அந்த மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் புதிய அறிவிப்பானை வெளியிடப்படும் என முதல்வர் அறிவித்துள்ளைதை தி.மு.க., வரவேற்கிறது. அதற்கு பாராட்டுகளுடன், நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.தற்போது தான் தாங்கள் சமூக நீதி பக்கள் வந்து கொண்டிருக்கிறீர்கள். எதிர்காலம் உங்களுக்கு அந்த பாதை சரியாக இருக்கும் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ