உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் ஆண்டு விழா

வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் ஆண்டு விழா

திருவெண்ணெய்நல்லூர் : அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் 30ம் ஆண்டு விழா நடந்தது.விழாவிற்கு, கல்லுாரி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமநாதன் வாழ்த்தி பேசினர். மாணவி வினோதினி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் அன்பழகன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லுாரி தலைவர் சரவணன், நிர்வாகக் குழு உறுப்பினர் அழகுமூர்த்தி சிறப்புரையாற்றினர்.சிறப்பு விருந்தினர் கிளவுட் மேனேஜ்டு சர்வீஸ், ரெடிங்டன் லிமிடெட் துணை தலைவர் உதயசங்கர் செயற்கை நுண்ணறிவு பற்றியும், தற்போதைய சூழ்நிலையில், தொழிற்சாலைகளின் தேவைகள் பற்றி விளக்கினார்.மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க சிறப்பாக பணியாற்றிய 5 பேராசிரியர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை, பொருளாதாரத்தில் பின் தங்கிய 30 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.பல்கலை தேர்வுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் இரு இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. மாணவி ராகவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை