மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி: தி.மு.க., வழங்கல்
3 hour(s) ago
ஹாஸ் பீனிக்ஸ் விருதுகள் வழங்கல்
3 hour(s) ago
சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் தரிசனம்
3 hour(s) ago
அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க பேரவைக் கூட்டம்
3 hour(s) ago
புதுச்சேரி, : புதுச்சேரியில் கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க, கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குநர் மாறன் அழைப்பு விடுத்துள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2024-25ம் ஆண்டுக் கான, முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.இதற்கு வரும் ஜூலை, 19,ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பட்டய பயிற்சியின் காலம் ஓராண்டாகும். இந்த பயிற்சி, 2 பருவங்களை கொண்டது.இதில் சேர்வதற்கு குறைந்த பட்சம், பிளஸ் 2, தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 10ம் வகுப்பு முடித்து, 3 ஆண்டுகள் பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். வரும், ஆகஸ்ட் முதல் தேதியன்று, 17, வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இப்பட்டய பயிற்சி தமிழில் மட்டுமே பயிற்றுவிக்கப்படும். தேர்வுகளை தமிழில் மட்டுமே எழுத வேண்டும்.மாணவர்கள் www.tncu.tn.gov.in, என்ற அதிகாரப்பூர்வ இளையதளம் வழியாக விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மட்டுமே, ஏற்றுக் கொள்ளப்படும்.பயிற்சிக்கான விண்ணப்பக்கட்டணம், ரூ.100 ஆகும். இதற்கான கூடுதல் விவரங்கள், வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் இணையதள முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம்.பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை, பதிவிறக்கம் செய்து விண்ணப்ப நகல், சான்றிதழ் நகலுடன் சுய ஒப்பமிட்டு, புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சியில் சேருவதற்கு தகுதி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தகவல் தெரிவிக்கப்படும்.இதற்கான பயிற்சிக்கான கட்டணம், 18 ஆயிரத்து 750 ரூபாயை முழுவதையும், ஒரே தவணையாக செலுத்த வேண்டும்.மேலும் தகவலுக்கு, 0413-2220105, 2331408, என்ற தொலைபேசி எண் அல்லது 9443413520,என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago