உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகளிர் ஆணைய தலைவி, உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மகளிர் ஆணைய தலைவி, உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி மகளிர் ஆணைய தலைவி மற்றும் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மகளிர் ஆணைய தலைவி மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு, புதுச்சேரியை சேர்ந்த தகுதியுள்ள, பெண்களை பாதுகாப்பதில் , ஆர்வம் மற்றும் அனுபவம் உள்ள பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 60 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான தகுதி, விதி முறைகள், நிபந்தனைகள் ஆகிய விபரங்களை அரசு இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், 6 உறுப்பினர்களில் தலா ஒருவர் பட்டியல் , பழங்குடி இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தகுதி சான்றிதழ்களுடன் இணைத்து, அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் துறை இயக்குனர் அலுவலகத்தில் அனுப்ப வேண்டும். இவ்வாறு துறையின் இயக்குனர் முத்து மீனா தனது செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை