உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு சட்டக்கல்லுாரியில் குவியும் விண்ணப்பங்கள் 

அரசு சட்டக்கல்லுாரியில் குவியும் விண்ணப்பங்கள் 

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சட்டக்கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கு இதுவரை, 400 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.புதுச்சேரி, காலாப்பட்டில், அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில், 2024-25ம் ஆண்டிற்கான, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் கடந்த, 1ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.இதில், 5 ஆண்டு சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை சென்டாக் மூலமும், 3 ஆண்டு சட்ட படிப்பு, முதுகலை சட்ட படிப்பு மற்றும் முதுகலை பிரெஞ்சு சட்ட பட்டய படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, சட்டக்கல்லுாரி மூலமும் நடக்கிறது.இந்த படிப்புகளில் சேர இதுவரை, 400 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்தாண்டில், இந்த படிப்புகளுக்கு மொத்தம், 600 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் 24 கடைசி தேதி. அதனால், கடந்தாண்டை விட கூடுதலாக, இந்தாண்டில் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 5 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சட்டப்படிப்புகளில் மொத்தம், 100 இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை