உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அண்ணா திடல் புதிய கடைகள் வியாபாரிகளுக்கு வழங்க ஏற்பாடு

அண்ணா திடல் புதிய கடைகள் வியாபாரிகளுக்கு வழங்க ஏற்பாடு

புதுச்சேரி அண்ணா திடலில் கட்டப்பட்டுள்ள கடைகள், வரும் 26ம் தேதி வியாபாரிகளுக்கு வழங்கப்படுகிறது.புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பழைய அண்ணா திடலை அழகுபடுத்தி, அதன் வெளிப்புறமாக 165 கடைகள் புதிதாக கட்டப் பட்டுள்ளது. அங்கு, கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியாக நடந்து வந்த, புதிய கட்டட பணிகள் முடிந்து, தற்போது லப்போர்த் வீதியில் 20 கடைகள், சின்னசுப்ராயபிள்ளை வீதியில் 79 கடைகள், அண்ணா சாலையில் 66 கடைகள் கட்டப்பட்டுள்ளன.இதில், மேலும் 13 கடைகள் கட்டப்பட வேண்டும். மொத்தம் 179 பேருக்கு, கடைகள் வழங்க உள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு மாதம் ரூ.8,000, ரூ.4,000, ரூ.2,500 என, கடைக்கு ஏற்ப வாடகையை நகராட்சி நிர்ணயித்துள்ளது.புதிதாக கட்டியுள்ள கடைகளை, விரைவாக வழங்க வேண்டுமென, வியாபாரிகள் முதல்வர் ரங்கசாமியிடம் வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து, முதல்வர் உத்தரவின் பேரில், முதல் கட்டமாக லப்போர்த் வீதி, சின்னசுப்ராயபிள்ளை வீதியில் கட்டப்பட்டுள்ள கடைகளை, வரும் 26ம் தேதி, வியாபாரிகளுக்கு வழங்க உள்ளனர். அதன்பிறகு, அண்ணா சாலையில் உள்ள கடைகள், வியாபாரிகளுக்கு வழங்கப்படும் என, நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை