மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
புதுச்சேரி, : புதுச்சேரி இ.சி.ஆரில் கலைஞர் அறிவாலயம் கட்ட தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.புதுச்சேரி மாநில தி.மு.க., செயற்குழு கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. அவைத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் அனிபால்கென்னடி எம்.எல்.ஏ., தைரியநாதன், குமார், பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., சம்பத் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தீர்மானங்கள் விளக்கி சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு நிறைவு விழாவை, ஜூன் 3ம் தேதி புதுச்சேரி மாவட்டம் தொகுதி தோறும் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்குவது. முதியோர், பார்வையற்றோர், மனநலம் குன்றியோர் பள்ளிகளில் உணவு வழங்கி, நலத்திட்ட உதவிகளை வழங்குவது.தேர்தலில் பணியாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி இ.சி.ஆரில் கட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள், தொண்டர்கள் பங்களிப்புடன் கலைஞர் அறிவாலயம் கட்டுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சன் குமாரவேல், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, லோகையன், ஆறுமுகம், காந்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago