மேலும் செய்திகள்
கணவர் கண்முன் மனைவி மினி லாரி விபத்தில் பலி
14-Sep-2024
புதுச்சேரி, : கருவடிக்குப்பத்தில் மதுபோதையில் சாலையில் படுத்திருந்த நபர் தலை மீது கார் ஏறி இறங்கியதில் உயிரிழந்தார்.காரைக்காலைச் சேர்ந்தவர் திருமுருகன், 40; லாஸ்பேட்டை ஜெயராஜ் நகர், மனோகர் நடத்தி வரும் மணல் லாரியில் வேலை செய்து கொண்டு, பிளாட்பாரத்தில் தங்கியிருந்தார். கடந்த 14ம் தேதி இரவு 11:00 மணிக்கு மதுபோதையில் இருந்த திருமுருகன், கருவடிக்கப்பம் மெயின்ரோடு, பாரிஸ் மகால் எதிரில் கலா என்பவரின் டிபன் கடையில் டிபன் சாப்பிட்டுவிட்டு, சங்கரதாஸ் சுவாமி நகர் வழியாக நடந்து சென்றார்.சிறிது நேரம் கழித்து திருமுருகன் தலையில் அடிப்பட்டு மயங்கி கிடந்தார். அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்தில் திருமுருகன் உயிரிழந்தார்.மர்ம நபர்கள் யாரேனும் திருமுருகனை தாக்கியதில் உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் லாஸ்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தபோது, மதுபோதையில் சாலையில் படுத்திருந்த திருமுருகன் தலை மீது அந்த வழியாக சிவா என்பவர் ஓட்டி வந்த ஹூன்டாய் கிரிட்டா கார் ஏறி இறங்கியதில் தலையில் அடிப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை கிழக்கு போக்குவரத்து போலிசுக்கு மாற்றப்பட்டு ஆவர்கள் விசாரித்து வருகின்றனர்.
14-Sep-2024