உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பல் டாக்டர் மீது தாக்குதல் பெண் உட்பட 3 பேருக்கு வலை

பல் டாக்டர் மீது தாக்குதல் பெண் உட்பட 3 பேருக்கு வலை

புதுச்சேரி: கிளினிக்கில் புகுந்து பல் டாக்டரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த பெண் உட்பட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகர், 12வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் சுமன், 38; பாக்கமுடையான்பேட் இ.சி.ஆரில் பல் மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறார். இவரது கிளினிக்கில், லாஸ்பேட்டை, குறிஞ்சி நகர், விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த பரணி, 20; வரவேற்பாளராக பணிபுரிகிறார்.கோரிமேட்டைச் சேர்ந்த சுனந்தினி, 30; கடந்த 4 மாதங்களுக்கு முன், சிகிச்சைக்கு வந்தார். அவருக்கு, பல் வரிசை சரியில்லாததால் டாக்டர் சுமனிடம் சிகிச்சை பெற்றார். 10 நாட்களுக்கு ஒரு முறை பல் கிளின் செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.கடந்த 4ம் தேதி சுனந்தினிக்கு முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. 5ம் தேதி இரவு 7:00 மணிக்கு, சுனந்தினி முன்பதிவு செய்யாமல் திடீரென கிளினிக் வந்தார். டாக்டர் சுமன் நாளைக்கு வாருங்கள் என கூறி அனுப்பினார். நேற்று முன்தினம் 2 அடையாளம் தெரியாத வாலிபருடன் கிளினிக் வந்த சுனந்தினி, வரவேற்பாளர் பரணியிடம் வாக்குவாதம் செய்தனர்.அவர்களை டாக்டர் சுமன் தட்டி கேட்டார். அப்போது, அப்பாய்மெண்ட் கொடுத்தால் வரமாட்டீர்களா என கேட்டு, டாக்டர் சுமனை அந்த கும்பல் திட்டி தாக்கினர். கிளினிக்கில் இருந்த கருங்கல்லால் ஆன புத்தர் சிலை கொண்டு டாக்டர் சுமன் தலையில் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். ஜிப்மரில் சிகிச்சை பெற்ற டாக்டர் சுமன், கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து சுனந்தினி மற்றும் அவருடன் வந்த நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை