உள்ளூர் செய்திகள்

பரிசளிப்பு விழா

திருக்கனுார் : திருக்கனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.ஆசிரியை சித்ரா வரவேற்றார். தலைமை ஆசிரியை உஷா தலைமை தாங்கினார். அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் மோகனாம்பாள் வாழ்த்தி பேசினார். முதன்மை கல்வி அதிகாரி மோகன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.10ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் மற்றும் பாட வாரியாக சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாண்டிச்சேரி ரோட்டரி கிளப் நிர்வாகிகள் அனுராதா ராஜகோபாலன், மேரி கலா, ராஜலட்சுமி, வழக்கறிஞர் மரி அண்ணா தயாவதி, ஓய்வு பெற்ற ஆசிரியை வத்சலா ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.ஆசிரியை மஞ்சுளா தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை