உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

அரியாங்குப்பம்: பூரணாங்குப்பம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் பசுமை தாயகம் குறுங்காடு வளர்ப்பு திட்டம் சார்பில், பரிசளிப்பு விழா நடந்தது.நோணாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மரம் வளர்ப்பது பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சி தொடர்பாக நடந்த போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.பள்ளி துணை முதல்வர் கல்யாணி தலைமை தாங்கினார். பேராசிரியர் பூங்குழலி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், அரியாங்குப்பம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர் கணேஷ், கந்தன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவர்கள் மரம் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி