உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விழிப்புணர்வு சைக்கிள் பிரசாரம்

விழிப்புணர்வு சைக்கிள் பிரசாரம்

புதுச்சேரி: தேர்தல் துறை சார்பில், குறைந்த சதவீதம் ஓட்டுப் பதிவு நடக்கும் இடங்களுக்கு சைக்கிள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் துவக்கப்பட்டது.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் என்ற திட்டத்தின் மூலம், தேர்தல் அதிகாரிகள் பல்வேறு வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.புதுச்சேரியில் கடந்த சட்டசபை தேர்தலில் குறைந்த சதவீதம் வாக்கு பதிவு நடந்த இடங்களான ராஜ்பவன், காமராஜ் நகர், முத்தியால்பேட்டை ஆகிய இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சைக்கிள் மூலம் பிரசாரம் கம்பன் கலையரங்கில் துவக்கப்பட்டது.சைக்கிளில் விளம்பர பலகை அமைத்து, இசையுடன் கூடிய வசனங்கள் அடங்கிய தேர்தல் பிரசாரத்தை உதவி கலெக்டர் யஷ்வந்த் மீனா,கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அந்த தொகுதியில் தேர்தல் நடத்தும், உதவி தேர்தல் அதிகாரிகள், நகராட்சி ஆணையர் கந்தசாமி, சுரேஷ்ராஜ் உட்பட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.விழிப்புணர்வு பிரசார சைக்கிளில், பலகை விளம்பரம், வாக்காளர் விழிப்புணர்வு கருத்துகள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் மொபைல் செயலிகள், கட்டணமில்லா தொலைபேசி எண் ஆகியவை இடப்பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை