உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

வில்லியனுார்: கரிக்கலாம்பாக்கம் எஸ்.ஆர்.கே. மேல்நிலைப் பள்ளி சார்பில், தேர்தலில் 100 சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.நிகழ்ச்சிக்கு கல்வி கழக நிறுவனர் தியாகராஜன் தலைமை தாங்கினார். வில்லியனுார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா, மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, கரிக்கலாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் இளமுருகு மற்றும் பள்ளி நிர்வாகி மகேந்திரன் ஆகியோர் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.ஊர்வலம் கரிக்கலாம்பாக்கம் பாகூர் சாலை மற்றும் உறுவையாறு சாலை பகுதியில் சுதந்திர போராட்ட தலைவர்கள் வேடம் அணிந்து ஓட்டுப் பதிவு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.ஊர்வலத்தை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வழி நடத்தி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ