உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வித்யாபவன் பள்ளியில் விழிப்புணர்வு ஊர்வலம் 

வித்யாபவன் பள்ளியில் விழிப்புணர்வு ஊர்வலம் 

புதுச்சேரி : தேங்காய்திட்டு வித்யாபவன் மேல்நிலைப் பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில் நடந்த மலேரியா விழிப்புணர்வு ஊர்வலத்தை பள்ளி முதல்வர் ரேகா ராஜசேகரன் துவக்கி வைத்தார். பள்ளியில் துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் அம்பேத்கர் சாலை, முதலியார்பேட்டை, மரப்பாலம் வழியாக பள்ளியை வந்தடைந்தது.ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள் மலேரியா குறித்து விழிப்பணர்வு பாதகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு மலேரியா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலத்தை பள்ளி ஆசிரியர்கள் வழி நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ