பாகூர் மூலநாதர் கோவில் குளம் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
பாகூர் மூலநாதர் சுவாமி கோவில் குளங்களை மீட்டெடுக்க, கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாகூரில் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. முதலாம் பராந்தக சோழ மன்னனால் கட்டப்பட்ட இக்கோவில், தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலை சீரமைத்து, கோவிலுக்கு பின்புறம் உள்ள மூன்று குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கும்பாபிேஷகம் செய்யவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனையடுத்து, கோவிலை புனரமைத்து கடந்த 2017ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஆனால், ஆக்கிரமிப்பில் இருந்து வரும் கோவில் குளங்களை மீட்பது தொடர்பாக, தொல்லியல் துறையோ, அல்லது மாநில அரசோ எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கோவில் குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரி தண்ணீரை சேமித்து அழகுப்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.