உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வங்கி துணை மேலாளர் மாயம் 

வங்கி துணை மேலாளர் மாயம் 

புதுச்சேரி: புதுச்சேரி, சாரம், குயவர்பாளையம் கிருஷ்ணசாமி கார்டனை சேர்ந்தவர் சிவசக்தி, 46. புதுச்சேரி, எஸ்.பி.ஐ., வங்கியின் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அன்பரசி என்ற மனைவியும், ஒரு மகள், மகன் உள்ளனர். கடந்த 11ம் தேதி சாரம், வேலன் நகரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு, அவரிடம் இருந்து 500 ரூபாயை வாங்கி கொண்டு, தனது வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.ஆனால், இதுவரையில் வீட்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து, உறவினர்கள் வீடுகளில் தேடியும் சிவசக்தி கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை