உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெத்தி செமினார் பள்ளி ஆண்டு விழா

பெத்தி செமினார் பள்ளி ஆண்டு விழா

புதுச்சேரி: புதுச்சேரி பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி ஆண்டு விழா நடந்தது.பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி-கடலுார் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், ஜிப்மர் இயக்குநர் வீர்சிங்நேகி ஆகியோர் பங்கேற்று பேசினார். கவுரவ விருந்தினர்களாக மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி, மறை மாவட்ட பொருளாளர் பிலோமின் தாஸ், மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை செயலாளர் நாராயணசாமி, செயின்ட் ஆன்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயலாளர் ஜோசப் ராஜ், ரெட்டியார்பாளையம் பங்குத்தந்தை ஜோசப் பால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.தொடர்ந்து பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட முதன்மை அலுவலகம் திறக்கப்பட்டது. விழாவில், ஒவ்வொரு மொழி பாடத்திலும் சிறப்பாகப் படித்து, வகுப்பில் முதல் இடத்தைப் பிடித்தவர்கள், நுாறு சதவீதம் பள்ளிக்கு வருகைப் புரிந்தவர்கள், பள்ளியின் பெருமை மிகு மாணவர்களாக 15 பேர், கவுரவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ