மேலும் செய்திகள்
வராகி அம்மனுக்கு மூல மந்திர யாகம்
42 minutes ago
உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
51 minutes ago
அமைச்சர் ராஜவேலுக்கு பிறந்தநாள் வாழ்த்து
1 hour(s) ago
அமைச்சர் ராஜவேலு பிறந்தநாள் விழா
1 hour(s) ago
திருக்கனுார்: செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவத்தை முன்னிட்டு பகாசூரன் அன்னம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு திரவுபதி அம்மன், செல்வ முத்துமாரியம்மன், கெங்கையம்மன் கோவிலில், தீமிதி உற்சவம் கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, காலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.இதற்கிடையே, நேற்றுமுன்தினம்பகாசூரன் அன்னம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், பகாசூரன் வேடம் அணிந்த பக்தர்கள் வீடு, வீடாக சென்று அன்னம் பெற்று சென்றனர். தொடர்ந்து,நாளை (7ம் தேதி)முத்து மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவமும், 9ம் தேதி அம்மன் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.முக்கிய நிகழ்வாக, வரும் 11ம் தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
42 minutes ago
51 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago