மேலும் செய்திகள்
வாலிபர் தற்கொலை
30 minutes ago
இறந்த நபர் யார் விசாரணை
30 minutes ago
புகார் பெட்டி: அடிக்கடி மின் தடை
30 minutes ago
டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு முதல்வருக்கு ராமதாஸ் பாராட்டு
53 minutes ago
காசநோய் பரிசோதனை முகாம்
53 minutes ago
திருபுவனை: மதகடிப்பட்டு பாரததேவி ஆங்கில உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்துள்ளது.மாணவர் சுபாஷ், மாணவி கயல்விழி ஆகியோர் தலா 488 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தனர்.மாணவி மாலினி 469 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம், மாணவர் நீலவன், மாணவி நர்மதா ஆகியோர் தலா 467 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர். 450க்கு மேல் 9 பேரும், 400க்கு மேல் 21 பேரும் மதிப்பெண் பெற்றனர். கணிதத்தில் 5 பேர், அறிவியலில் 9 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று, கிராமப்புற பள்ளிகளில் சாதனை படைத்துள்ளனர்.மாணவர்கள் மற்றும் தொடர் சாதனைக்கு துணையாக உள்ள ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகி இளமதியழகன், மேலாண் இயக்குனர் தாரணி இளமதியழகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.பள்ளியின் பொறுப்பாசிரியை தேவி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடனிருந்தனர்.
30 minutes ago
30 minutes ago
30 minutes ago
53 minutes ago
53 minutes ago