உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற தம்பதி பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற தம்பதி பலி

விருத்தாசலம், : விருத்தாசலத்தில் பைக்கில் சென்ற தம்பதி, அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சித்தேரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன்,70; இவரது மனைவி வேம்பு,65; இவர்களுக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்நிலையில் பார்வை குறைபாட்டால் அவதிப்பட்டு வந்த வேம்பு, சிகிச்சைக்காக சேலம் கண் மருத்துவமனைக்கு சென்றவர், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு விருத்தாசலம் பஸ் நிலையம் வந்தார்.அவரை, காசிநாதன் பைக்கில் ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் வயலுார் மேம்பாலத்தில் சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது.இதில், துாக்கி வீசப்பட்ட வேம்பு, 30 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து உடல் நசுங்கி இறந்தார். படுகாயமடைந்த காசிநாதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்தார்.விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி