உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

புதுச்சேரி: பைக் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் அடுத்து நல்லாவூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர், புதுச்சேரி இந்திரா சதுக்கம் அருகே உள்ள கடை ஒன்றில் வேலை செய்கிறார். கடைக்கு சொந்தமாக அருகில் உள்ள குடோன் பகுதியில் கடந்த 18ம் தேதி தனது பைக்கை நிறுத்தி விட்டு, வேலைக்கு சென்றார். வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.அவர் அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை