மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
4 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
4 hour(s) ago
புதுச்சேரி : சங்கத்தமிழ் இலக்கிய பூங்கா, ஜெர்மனி தமிழருவி வானொலி இணைந்து பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவை புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடத்தின.சங்க இலக்கிய பூங்காவின் தலைவர் நீலகண்ட தமிழன் தலைமை தாங்கினார். கவிஞர் புவனா வரவேற்றார். கவிஞர்கள் அருணா தேவி, மணிமொழி செல்வன், நித்தியா, பவானி, குவளை வழகன், கலைவாணி, மஸ்கட் தமிழ் பூங்குன்றன் மற்றும் விசாலாட்சி, பைரவி ஆகியோர் பாவேந்தரின் புகழ் பற்றி கவிதை வாசித்தனர். கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள், சமூக சேவகர் ஆதவன், தமிழ்ச்சங்க தலைவர் முத்து, ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து சங்க பூக்கள் ஐந்து, முகங்கள் ஆறு என, இரண்டு நுால்களை கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள் வெளியிட தேசிய விருதாளர் ஆதவன் பெற்றுக் கொண்டார். விழாவில் கடலுார் கவிஞர் கடல் நாகராஜனுக்கு தமிழ்ப் பணிச் செம்மல் விருது வழங்கப்பட்டது.தமிழ் செம்மல் சஞ்சீவராயர், கவிஞர்கள் ஆறு செல்வன், கலைவரதன், முருகன், பாலகண்ணியப்பன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கவிஞர் விசாலாட்சி நன்றி கூறினார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago