மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
7 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
7 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
7 hour(s) ago
புதுச்சேரி: கடல் அரிப்பு விவகாரத்தில் பதில் அளிக்காததை கண்டித்து பா.ஜ., எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் வெளிநடப்பு செய்தார்.சட்டசபை பூஜ்ய நேரத்தின்போது கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பேசியதாவது:கனகசெட்டிக்குளம், பெரியக்காலாப்பட்டு, சின்னக்காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. ைஹமாஸ், மினிமாஸ், மீனவர்களின் மீன் உலர்த்தும் கூடம் என அனைத்தும் அடித்து செல்லப்பட்டுள்ளது.மொத்தம் 20 கோடி ரூபாய் அளவிற்கு அரசு சொத்துகள் சேதமடைந்துள்ளன. நான்கு கிராமங்களில் பிணங்களை புதைக்கும் இடமும் காணாமல் போய்விட்டது. அப்பகுதிகளில் உயிருக்கும், உடமைகளுக்கும் உத்தரவாதம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. டெண்டர் விடும் வரை காத்திருக்காமல், துரிதமாக பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடியாககருங்கல் கொட்ட வேண்டும். ஆளும் கட்சியாக இருந்தாலும் மக்களுக்காக நானும் இறங்கி போராட்டம் நடத்துவேன்' என்றார்.தொடர்ந்து இந்த கோரிக்கைய நிறைவேற்ற வலியுறுத்தி வெளிநடப்பு செய்தார்.அவர், கூறுகையில், 'காலாப்பட்டு தொகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. கடல் அரிப்பு சம்பந்தமாக பூஜ்ய நேரத்தில் நான் கேட்ட கேள்விக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் பதில் அளிக்கவில்லை. மக்களுடைய பிரச்னைக்கு பதிலளிக்க மறுத்ததால் வெளிநடப்பு செய்தேன். கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட காலாப்பட்டு பகுதியில் துாண்டில் முள் வளைவு முறையில், கருங்கல் கொட்டப்படும். காலாப்பட்டு தொகுதியை புறக்கணித்தால் மக்களை திரட்டி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்' என்றார்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago