உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராகுலை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

ராகுலை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி : லோக்சபா எதிர்கட்சித்தலைவர் ராகுலை கண்டித்து,பா.ஜ., இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.லோக்சபாவில் ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில், எதிர்கட்சித்தலைவர்ராகுல்ஹிந்துக்கள் குறித்து பேசியதை கண்டித்து, பா.ஜ., இளைஞர் அணி சார்பில் ராஜா தியேட்டர் சந்திப்பில் ஆர்ப்பாட்டம்நேற்றுநடந்தது. போராட்டக்காரர்கள் ராகுல் மன்னிப்பு கோர வேண்டும் என கோஷமிட்டனர். கையில் வைத்திருந்த ராகுல் புகைப்படத்தை கிழித்து எரிக்க முயன்றனர்.பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெரியக்கடை போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும்,போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் மாநில பா.ஜ., பொதுச் செயலாளர் மோகன்குமார், செயலாளர் வெற்றிச்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தடையை மீறி நேரு வீதி வழியாக செல்ல முயன்ற பா.ஜ.,வினரை போலீசார் பிடித்து வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின், அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி