உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 2 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க பா.ஜ., ஆலோசனை கூட்டத்தில் முடிவு 

2 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க பா.ஜ., ஆலோசனை கூட்டத்தில் முடிவு 

புதுச்சேரி, : புதுச்சேரியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்க பா.ஜ., ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இந்தியா முழுதும் பா.ஜ., உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தலைவர் நட்டா, அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ் ஆகியோர் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர்.கூட்டத்தில் புதுச்சேரி மாநில தலைவர் செல்வ கணபதி எம்.பி., எம்.எல். ஏ.,க்கள் அசோக்பாபு, ராமலிங்கம், பொதுச் செயலா ளர்கள் மோகன்குமார், மவுலிதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இந்தியா முழுதும் உறுப்பினர்கள் சேர்க்கை நடத்துவது தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டது. புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு உறுப்பினர்கள் சேர்க்கை பொறுப்பாளராக ஆந்திர மாநில தலைவர் புரந்தேஸ்வரி நியிமிக்கப்பட்டுள்ளார்.புதுச்சேரியில் ஒரு பூத்துக்கு 200 உறுப்பினர்கள் சேர்ப்பது, மாநில, மாவட்டம், தொகுதி வாரியாக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. முகாம் செப்டம்பர் 1ம் தேதி துவங்கி, வரும் அக்டோபர் 18ம் தேதி வரை நடக்க உள்ளது.புதுச்சேரியில் உள்ள 947 பூத்களிலும் பூத்திற்கு 200 பேர் வீதம், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக புதுச்சேரி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள புரந்தேஸ்வரி வரும் 20ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தந்து, உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தொடர்பாக விவாதிக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை