மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
புதுச்சேரி : நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 74வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புதுச்சேரி தமிழ் சங்கத்தில் புத்தக கண்காட்சி நடந்தது. கண்காட்சியை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் துவக்கி வைத்தார். இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். நியூ செஞ்சுரி புத்தக நிறுவன பொதுமேலாளர் சந்தானம் முன்னிலை வகித்தார். ஜெயசீலன் ஸ்டீபன் எழுதிய 'நோயாளியின் மருத்துவர்' என்ற நுாலை அமைச்சர் வெளியிட, தமிழ் சங்க தலைவர் முத்து பெற்றுக் கொண்டார். பாரதிதாசன் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் சேதுபதி வாழ்த்துரை வழங்கினார். புதுச்சேரி பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் ரவிக்குமார் நுால் அறிமுகவுரையாற்றினார்.நுாலாசிரியர் ஜெயசீலன் ஸ்டீபன் ஏற்புரையாற்றினார். கலை இலக்கிய பெருமன்ற தலைவர் எல்லை சிவக்குமார் வரவேற்றார். மண்டல மேலாளர் எத்திராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தாகூர் கலை கல்லுாரி முன்னாள் முதல்வர் இளங்கோவன், தமிழ்துறை விரிவுரையாளர் பழனிவேல், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், தமிழ் சங்க செயலாளர் சீனு மோகன்தாஸ், துணை தலைவர் திருநாவுக்கரசு உட்பட பலர் பங்கேற்றனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago