உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ப்ரைனி ப்ளூம்ஸ் சீனியர் செகண்டரி பள்ளி சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில் சாதனை

ப்ரைனி ப்ளூம்ஸ் சீனியர் செகண்டரி பள்ளி சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில் சாதனை

புதுச்சேரி: திருக்கனுார் ப்ரைனி ப்ளூம்ஸ் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ பள்ளி பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.இப்பள்ளி மாணவர்கள் கடந்த 6 ஆண்டாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.இவ்வாண்டு மாணவர் ரோஷன் 484 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 400 மதிப்பெண்ணிற்கு மேல் 16 மாணவர்கள் பெற்றுள்ளனர்.அதேபோன்று கடந்த 4 ஆண்டாக பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இவ்வாண்டு மாணவி ராதிகா 461 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 400 மதிப்பெண்ணிற்கு மேல் 17 பேர் பெற்றுள்ளனர்.பள்ளியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களை ப்ரைனி ப்ளூம்ஸ் அரவிந்த் கல்வி குழுமத்தின் தலைவர் அருண்குமார், துணைத்தலைவர் திவ்யா, ஸ்ரீ அரவிந்த் கல்விக் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் சத்தியவேலு ஆகியோர் பாராட்டினர். மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வி குழுமத் தலைவர் அருண்குமார் நன்றி தெரிவித்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ