மேலும் செய்திகள்
ரொட்டி,பால் ஊழியர்கள் 3ம் நாளாக வேலை நிறுத்தம்
06-Mar-2025
புதுச்சேரி : உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்த அனுமதிக்காததால், சாலை மறியலில் ஈடுபட்ட 247 ரொட்டி ,பால் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரொட்டி, பால் ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாதம் 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.இதுவரை வழங்கவில்லை. உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க வலியுறுத்தி சங்க ஒருங்கிணைப்பாளர் மாறன் தலைமையில் கல்வித்துறை அலுவலகத்தில் நேற்று 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட திரண்டனர்.போராட்டத்திற்கு அனுமதியில்லை என கூறி கல்வித்துறை வளாக கதவுகள் மூடப்பட்டது. இதனால் ஊர்வலமாக சட்டசபை செல்ல அனுமதி கேட்டனர். அதற்கும் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் காலை 11:00 மணிக்கு, ராஜிவ் சிக்னல் அருகே நுாறடிச்சாலையில் ரொட்டி, பால் ஊழியர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர். இதனால் ரொட்டி, பால் ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.இதில் ரொட்டி, பால் ஊழியர் முத்துலட்சுமி காயமடைந்தார். மறியலில் ஈடுபட்ட 5 ஆண்கள் மற்றும் 242 பெண்களை போலீசார் கைது செய்து, கரிக்குடோனில் தங்க வைத்தனர். பள்ளி கல்வித்துறை மதிய உணவு துணை இயக்குநர் கொஞ்சுமொழிகுமரன் பேச்சு வார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்ற 3 நாள் அவகாசம் கேட்டார். அதை ஏற்று, ரொட்டி, பால் ஊழியர்கள் போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.
06-Mar-2025