உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவில் உண்டியல் உடைத்து காணிக்கை திருட்டு

கோவில் உண்டியல் உடைத்து காணிக்கை திருட்டு

பாகூர் : பாகூர் திரவுபதியம்மன் கோவில் உண்டியல் உடைத்து காணிக்கை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பாகூர் திரவுபதியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூசாரி பூஜையை முடித்து கோவிலை பூட்டிச் சென்றார். நேற்று காலை வழக்கம் போல், பூசாரி கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூபாய் நோட்டுகள் மட்டும் திருடப்பட்டது. சில்லரை காசுகள் மட்டும் சிதறி கிடந்தன.தகவலறிந்த பாகூர் சப் இன்ஸ்பெக்டர் நத்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். ஏற்கனவே, பாகூர், அரங்கனுார், பரிக்கல்பட்டு பகுதிகளில் உள்ள கோவில்களில் உண்டியல் உடைத்து திருடப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு உண்டியல் கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை