மேலும் செய்திகள்
வங்கி ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
22-Feb-2025
புதுச்சேரி: சாம்சங் நிறுவன ஊழியர்களுக்கு ஆதரவாக அகில இந்திய பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்கம் சார்பில், புதுச்சேரி தலைமை அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், சி.ஐ.டி.யு., உதவி செயலாளர் கொளஞ்சியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.இதில், சாம்சங் சங்க ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். நியாயமாக கிடைக்க வேண்டிய சலுகைகளை உடனே வழங்க வேண்டும். போராடும் ஊழியர்களின் தலைவர்களை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
22-Feb-2025