மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
11 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
11 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
11 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
11 hour(s) ago
புதுச்சேரி : அனைத்து தரப்பினர்களுக்கான பட்ஜெட்டினை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளதாக என்.ஆர்.காங்., மாநில சிறப்பு அழைப்பாளர் நந்தா ஜெயஸ்ரீதரன் பாராட்டு தெரிவித்தார்.அவரது அறிக்கை:அனைத்து தரப்பினருக்கான பட்ஜெட்டினை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். இந்தாண்டு முதல் இலவச அரிசி மீண்டும் வழங்கப்படும். மானிய விலையில் பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லதரசிகளை கவர்ந்துள்ளது. மீனவர்களுக்கான தடைக்கால நிவாரணம் 8 ஆயிரமாக உயர்த்தியுள்ளது பாராட்டுக்குரியது. மடுகரை அரசு மேல்நிலைப் பள்ளியை முதன்மை கலைக்கல்லுாரியாக மாற்றுதல், மாடித்தோட்டம் அமைக்க 5 ஆயிரம் ரூபாய் மானியம் போன்றவை முதல்வரின் தொலைநோக்கு பார்வையை காட்டுகிறது. மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.சாலை மேம்பாடு பொலியூர் நகரம், மீனவர்நலம், விவசாய மேம்பாடு காரைக்கால், மாகி, ஏனம் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து புதிய மாநில மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago