மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
14 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
14 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
14 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
14 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரியில், வாடிக்கையாளர்கள் 2ஜி, 3ஜி, சிம்கார்டுகளை மாற்றி புதிய 4ஜி, சிம் கார்டை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என, பி.எஸ்.என்.எல் முதன்மை பொதுமேலாளர் தெரிவித்துள்ளார். அவர், வெளியிட்ட செய்திக்குறிப்பு:புதுச்சேரி பி.எஸ்.என்.எல் நிறுவனம், 4ஜி சேவையை, இம்மாதத்தில் துவங்க உள்ளது. இதற்கான வேலைகள் மிக துரிதமாக, புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் நடந்து கொண்டிருக்கிறது.வாடிக்கயைாளர்கள் தற்போது தங்களிடம் உள்ள பழைய உள்ள, 2ஜி, 3ஜி, சிம் கார்டுகளை மாற்றி புதிய, 4ஜி சிம் கார்டாக இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.மேலும் தங்களிடம் உள்ள சிம்கார்டுகள் பற்றி விபரம் அறிந்து கொள்ள, 9442824365 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்து, தெரிந்து கொள்ளலாம்.இதன் மூலம் தங்களிடம் உள்ள சிம்மை பற்றிய, விபரம் தெரிந்து கொள்ள முடியும். அதேவேளையில், இதற்கான குறுஞ்செய்தியையும், பெற்றுக்கொள்ளலாம். இந்த சலுகை குறுகிய காலத்திற்கு மட்டும்.அதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் அருகில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையம் (புதுச்சேரி, வில்லியனுார், மேட்டுப்பாளையம்) மற்றும் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர் மையங்களை அணுகலாம்.மேலும் மேளா நடைபெறும் திருபுவனை, மேட்டுப்பாளையம், பாகூர், வில்லியனுார், சேதராப்பட்டு, லாஸ்பேட் ராஜிவ்காந்தி பார்க், ஏம்பலம் சந்திப்பு, அரும்பார்த்தபுரம், கரியமாணிக்கம் சந்திப்பு, தவளக்குப்பம், முதலியார்பேட்டை சந்திப்பு, கண்டமங்கலம் ஆகிய இடங்களில் புதிய 4ஜி, சிம் கார்டை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இதனுடன் 4 ஜி.பி., இலவச டேட்டாவையும் பெறலாம். புதுச்சேரி, வில்லியனுார், மேட்டுப்பாளையம் வாடிக்கையாளர் சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமையும் இயங்கும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago