மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
19 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
19 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
19 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
19 hour(s) ago
புதுச்சேரி, : புதுச்சேரியில் கூரியர் நிறுவன குடோன்களில் மோப்ப நாய் உதவியுடன், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர்.புதுச்சேரியில் கஞ்சா பழக்கத்தால் இளைஞர்கள் கொலை, பாலியல் வன்முறை உள்ளிட்ட பல குற்ற சம்பவங்களில் ஈடுப்படுகின்றனர். கஞ்சா விற்பனையை முழுதும் ஒழிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். டி.ஜி.பி., உத்தரவின்பேரில், போலீசார் ரவுடிகள் வீடுகளில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு உள்ளதா என திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.இந்நிலையில், கூரியர் பார்சல்கள் மூலம் கஞ்சா கடத்தி வர வாய்ப்பு உள்ளதால், பார்சல்களை சோதனை செய்ய அறிவுறுத் தப்பட்டது. இதைத் தொடர்ந்து, போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் தலைமையிலான போலீசார், வெங்கட்டா நகர் மற்றும் திருவள்ளுவர் சாலையில் உள்ள கூரியர் நிறுவன குடோன்களில் சோதனையில் ஈடுப்பட்டனர். போதை பொருட்களை கண்டறியும் மோப்ப நாய் பைரவா மூலம் கூரியர் பார்சல்களை சோதனை செய்தனர். போதை பொருட்கள் ஏதும் சிக்கவில்லை. இதுபோன்ற சோதனைகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago