உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்கால் வந்தது காவிரி தண்ணீர் எம்.எல்.ஏ., கலெக்டர் மலர் துாவி வரவேற்பு

காரைக்கால் வந்தது காவிரி தண்ணீர் எம்.எல்.ஏ., கலெக்டர் மலர் துாவி வரவேற்பு

காரைக்கால் : காரைக்காலுக்கு வந்தடைந்த காவிரி தண்ணீரை எம்.எல்.ஏ., மற்றும் கலெக்டர் மலர் துாவி வரவேற்றனர்.புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தின் கடைமடைப்பகுதி. இங்கு ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து வரும் காவிரி தண்ணீரை பயன்படுத்தி விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தாண்டு மேட்டூர் அணை தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 1ம் தேதி கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. பின், முக்கிய ஆறுகள் வழியாக காவிரி நீர் நேற்று திருநள்ளாறு கொம்யூன், நல்லம்பல் கிராமத்தில் உள்ள நுாலாறு நீர்தேக்கத்திற்கு வந்தடைந்தது. காவிரி தண்ணீரை சிவா எம்.எல்.ஏ., தலைமையில் கலெக்டர் மணிகண்டன் ஆகியோர் மலர் துாவி வரவேற்றனர். பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், மகேஷ், கடைமடை விவசாயிகள் சங்க தலைவர் சுரேஷ் உட்பட பலர் உடனிருந்தனர். காரைக்காலுக்கு காவிரி தண்ணீர் 384 கன அடி வந்து கொண்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ