உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரியூர் கோவிலில் செடல் உற்சவம்

அரியூர் கோவிலில் செடல் உற்சவம்

புதுச்சேரி: அரியூர் உலக வாழியம்மன் கோவில் தேர் மற்றும் செடல் உற்சவம் நடந்தது.அரியூர் உலகவாழியம்மன் கோவிலில் 321வது ஆண்டு தேர் மற்றும் செடல் பிரம்மோற்சவ விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, தினசரி உலகவாழியம்மன், சுந்தர விநாயகர், அய்யனார், உருவாத்தம்மன், சப்தகன்னிகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.26ம் தேதி அன்ன வாகனத்திலும், 28ம் தேதி நாகசப்த சயன வாகனத்திலும், 29ம் தேதி கிருஷ்ணன் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. 30ம் தேதி சிவன் பார்வதி திருக்கல்யாண உற்சவம், நடந்தது.1ம் தேதி சிம்ம வாகனத்திலும், 2ம் தேதி குதிரை வாகனத்திலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நேற்று காலை கிராம மக்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். மாலை 6:00 மணிக்கு செடல் உற்வசம், உலகவாழியம்மன் தேர் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவில் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இன்று 4ம் தேதி தெப்ப திருவிழா, நாளை 5ம் மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி