உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய நீர்வள அமைப்பு குழுவிடம் தலைமை பொறியாளர் மனு

மத்திய நீர்வள அமைப்பு குழுவிடம் தலைமை பொறியாளர் மனு

புதுச்சேரி : தென்பெண்ணையாற்றின் புதுச்சேரி நதிநீர் பங்கீட்டினை வழங்க வேண்டி, மத்திய நீர்வள அமைப்பு தலைவர் குஷ்விந்தர் ஓரா தலைமையிலான குழுவிடம் புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன் மனு வழங்கினார்.மனுவில் கூறியிருப்பதாவது:கர்நாடகத்திலிருந்து, தமிழகத்தின் வழியாக புதுச்சேரிக்கு பாயும் தென்பெண்ணையாற்றில் இருந்து புதுச்சேரிக்கு சேர வேண்டிய நதிநீர் பங்கை பெறுவதற்காக பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள அணைகட்டுகள் மற்றும் நீர்தேக்க கட்டுமானங்களை கள ஆய்வு செய்வதற்காக கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஆய்வு பணியில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், பெங்களூரு சென்று கள ஆய்வில் கலந்து கொண்டார்.இந்நிலையில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பங்கீடு செய்வதில் உள்ள சிக்கலை தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, மத்திய நீர்வள அமைப்பு தலைவர் குஷ்விந்தர் ஓரா தலைமையிலான குழுவினர் கடந்த 8, 9, 10 ஆகிய தேதிகளில் தென்பெண்ணையாற்றில் கட்டப்பட்டுள்ள, கர்நாடகா மற்றும் தமிழக அணைகள், அவற்றில் உள்ள நீர் இருப்பு குறித்தும், ஆய்வு செய்தனர்.இக்கள ஆய்வில் புதுச்சேரிக்கு சேர வேண்டிய நதிநீர் பங்கை அளிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் மத்திய நீர்வள அமைப்பு தலைவர் குஷ்விந்தர் ஓரா மனு வழங்கினார். மனுவை பெற்றுக் கொண்ட அக்குழு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இத்தகவலை பொதுப்பணித்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்