உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து

புதுச்சேரி : 'டி-20' உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தி:'டி-20' கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி, உலகக்கோப்பையை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.இத்தொடரில், இந்தியா ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் தொடர்ந்து தொடரை கைப்பற்றி, பட்டம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும். மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்து அணிகளை தொடர்ந்து, 'டி-20' உலகக்கோப்பையை, இரண்டு முறை வென்ற அணியாக வரலாற்று சாதனை படைத்திருக்கும் இந்திய அணிக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.இந்த தொடருடன், 'டி-20' தொடரில் இருந்து, ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெறுகின்றனர். இந்திய கிரிக்கெட்டின் வெற்றி பயணத்தில், அவர்களின் பங்கு அளப்பரியது.மிகவும் வெற்றிகரமாக அவர்கள் தங்களின் பங்கினை முடிவுக்கு கொண்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது. அவர்களின் பங்களிப்பு கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு மேலும் தொடரவும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை