உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விசைப்படகுகள் பழுது நீக்க முதல்வர் ரூ.34.40 லட்சம் வழங்கல்

விசைப்படகுகள் பழுது நீக்க முதல்வர் ரூ.34.40 லட்சம் வழங்கல்

புதுச்சேரி : விசைப்படகுகள் பழுது நீக்குவதற்கு, ரூ.34.40 லட்சத்திற்கான அரசாணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.புதுச்சேரி அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும் மீன் பிடி தடைக்காலத்தில், பதிவு பெற்ற விசைப்படகுகளுக்கு, பழுது நீக்குவதற்கு மர, இரும்பு, பைபர் விசைப்படகுகளுக்கு, ரூ.30 ஆயிரம், சிறிய விசைப்படகுகளுக்கு ரூ.20 ஆயிரம் வழங்குகிறது.இத்திட்டத்தின் கீழ், 2024-25,ம் ஆண்டிற்கான, தடை காலத்திற்கு, புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த, 82 மர, இரும்பு, பைபர் விசைப்படகுகளுக்கு ரூ.30 ஆயிரம் வீதம், ரூ.24.60 லட்சமும், 49 சிறிய விசைப்படகுகளுக்கு ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.9.80 லட்சம், என மொத்தம், ரூ.34.40 லட்சம், பதிவு பெற்ற விசைப்படகு உரிமையாளர்களின், வங்கிக்கணக்கில் செலுத்துவதற்கு, அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் முன்னிலையில், புதுச்சேரியை சேர்ந்த விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்திடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மீன்வளத்துறை செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் முகமது இஸ்மாயில், இணை இயக்குனர் தெய்வ சிகாமணி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்